இசையமைப்பாளர் சாமுக்கு பாடகர் ஹரிஹரன் மனம் திறந்து பாராட்டு
- princecinemas
- Sep 18, 2016
- 1 min read

இளம் இசையமைப்பாளர் சாமுக்கு பிரபல பின்னணிப் பாடகர் ஹரிஹரன் மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மெல்லிசை படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ள ன. விழாவில் விஜய் சேதுபதி பாடல்களை வெளியிட்டார். கலந்து கொண்ட பலரும் பாடல்களையும் இசையமைத்த சாமையும் பாராட்டினார்கள். சாம் இசையமைக்கும் இரண்டாவது படம் ‘கடலை’ . இப்படத்தின் பாடல்களும் சாமுக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் என்று நம்புகிறார் சாம். படத்தில் ஒரு பாடலை பிரபல பின்னணிப் பாடகர் ஹரிஹரன் பாடியுள்ளார். பாடி முடிந்ததும் அப்பாடல் தனக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறியவர் கடலை படத்தின் மற்ற பாடல்களையும் கேட்டு விட்டு அனைத்துப் பாடல்களும் அருமையாக வந்துள்ளன என்று இசையமைப்பாளர் சாமை மனம் திறந்து பாராட்டியுள்ளார். இப்போது சாம் உற்சாகத்தில் உயரே பறந்து கொண்டிருக்கிறார்.










Comments